பாடசாலை மாணவனின் உயிரிழப்பு : திருக்கோவில் வைத்தியசாலையை முற்றுகையிட்ட மக்கள்

By Asar Mar 11, 2024 11:25 AM GMT

அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவனின் உயிரிழப்புக்கு நீதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறை திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் க.பொ .த சாதாரண தரத்தில் கல்விபயின்ற மாணவர் ஒருவர் மரதன் ஓட்டப்போட்டி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தபோது மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.

கல்வீச்சு தாக்குதல்

வைத்தியசாலையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் இந்த உயிரிழப்பு இடம்பெற்றதாக தெரிவித்து அப்பகுதி மக்கள், பாடசாலை மாணவர்கள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதலும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்தநிலையில் தற்போதும் கூட அப்பகுதியில் தொடர்ச்சியாக பதற்ற நிலை நிலவி வருவதுடன், அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதகாவும் தெரிவிக்கப்படுகிறது.