யாழ். உடுப்பிட்டியில் மதுபான சாலையை அகற்ற கோரி போராட்டம் (Photos)

Sri Lanka Police Jaffna Sri Lankan Peoples Drugs
By Kajinthan Sep 14, 2023 09:59 AM GMT
Kajinthan

Kajinthan

யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

உடுப்பிட்டி சந்தியில் இன்று (14.09.2023) காலை இந்த போராட்டம் அப்பகுதி மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

மதுபான சாலை அமைந்துள்ள குறித்த பகுதியில் பாடசாலைகள், ஆலயம் என்பன இருப்பதனால் இந்த மதுபானசாலை அகற்றப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

யாழ். உடுப்பிட்டியில் மதுபான சாலையை அகற்ற கோரி போராட்டம் (Photos) | Protest Demand Removal Of Bar In Udupiddy

அத்தோடு சில தினங்களுக்குள் மதுபான சாலை அகற்றப்படாவிட்டால் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.

போராட்டம் தொடர்பான மகஜர் வடக்கு மாகாண ஆளுநர், அரசாங்க அதிபர் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.