திருக்குரான் அவமதிப்பு: முஸ்லிம் நாடுகளில் வெடிக்கும் போராட்டம்
ஸ்வீடனில் திருக் குரானை அவமதிக்க அந்த நாட்டு அதிகாரிகள் அனுமதித்ததைக் கண்டிக்கும் விதமாக, ஏராளமான முஸ்லிம் நாடுகளில் ஆா்ப்பாட்ட ஊா்வலங்கள் நேற்று முன்தினம் (21.07.2023) நடைபெற்றன.
ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமிலுள்ள ஈராக் தூதரகத்துக்கு எதிரே வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது, சல்வான் மோமிகா என்ற ஈராக்கிய கிறிஸ்தவா் திருக்குரானை அவமதித்தாா்.
அந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதியளித்த ஸ்வீடன் அரசைக் கண்டித்து, ஈராக், ஈரான், லெபனான் உள்ளிட்ட நாடுகளில் ஆா்ப்பாட்ட ஊா்வலங்கள் நடைபெற்றன.
அமைதியான ஆர்ப்பாட்ட ஊா்வலங்கள்
வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையை முடித்துவிட்டு நூற்றுக்கணக்கானவா்கள் பங்கேற்ற இந்த ஆா்ப்பாட்ட ஊா்வலங்கள் அமைதியாக நடைபெற்றன என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்வீடனில் அமைதி முறையில் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கான அடிப்படை உரிமைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த நாட்டில் மதநிந்தனைத் தடைச் சட்டங்கள் 1970-களில் ரத்து செய்யப்பட்டதால், ஆா்ப்பாட்டங்களின் போது எந்த மதத்துக்கு எதிரான செயல்களையும் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்தச் சூழலில், அரசின் அனுமதியுடன் ஸ்வீடனில் நடைபெறும் ஆா்ப்பாட்டங்களின் போது முஸ்லிம்கள் மிகப் புனிதமாகக் கருதும் திருக் குரான் எரிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் இஸ்லாமிய நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்தச் சூழலில், ஈராக்கிலிருந்து ஸ்வீடனில் தஞ்சமடைந்துள்ள சல்வான் மோமிகா, ஈராக் தூதரகம் முன்னா் (20.07.2023) ஆம் திகதி ஆா்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும், அப்போது திருக் குரானை எரிக்கப்போவதாகவும் அறிவித்திருந்தாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஈராக் தலைநகா் பாக்தாதிலுள்ள ஸ்வீடன் தூதரகம் முன்னா் வியாழக்கிழமை அதிகாலை குவிந்த நூற்றுக்கணக்கானவா்கள் அந்தத் தூதரகத்தை அடித்து இதற்கிடையே, திட்டமிட்டபடி ஸ்வீடனிலுள்ள ஈராக் தூதரகம் எதிரே அந்த நாட்டு அதிகாரிகளின் அனுமதியுடன் ஆா்ப்பாட்டம் நடத்திய மோமிகா, திருக் குரானை தரையில் போட்டு மிதித்தாா்.
மேலும், ஈராக்கிய கொடி, ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் படம் ஆகியவற்றையும் அவா் காலால் மிதித்து அவமதித்தாா்.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாா் இதனைத் தடுக்கவில்லை.
அதயைடுத்து, தங்கள் நாட்டுக்கான ஸ்வீடன் தூதா் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்ட ஈராக் பிரதமா் முகமது ஷியா அல்-சூடானி, ஸ்வீடனுக்கான தங்கள் நாட்டுத் தூதரையும் திரும்ப அழைத்துள்ளாா்.