இஸ்ரேல் மற்றும் லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் அவதானம்
இஸ்ரேல் மற்றும் லெபனானில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானம் செலுத்திவருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தொடர்ந்தும் அங்குள்ள தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவசரநிலை ஏற்பட்டால், அது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல்
இன்று காலை ஹிஸ்புல்லா தரப்பினர், வடக்கு இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட எறிகணை தாக்குதல்களை நடத்தியது.
இதனால் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு அடுத்த 48 மணி நேரத்திற்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |