கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுங்கள்: ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

Ampara Batticaloa Sri Lanka Tourism Eastern Province
By Laksi Jan 09, 2025 06:47 AM GMT
Laksi

Laksi

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையினை முன்னேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் (M.L.A.M. Hizbullah) கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (7) உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அத்தோடு, நாட்டினுடைய பொருளாதாரத்தில் மிக முக்கிய வருமானமாக இருக்கின்ற சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு எந்தவொரு பணியையும் இதுவரை முன்னெடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2025ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம்

இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2025ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம்

சுற்றுலாத்துறை

அவர் மேலும் உரையாற்றுகையில், சுற்றுலாத்துறையின் பிரதான இடமாக கிழக்கு மாகாணம் திகழ்கிறது.

குறிப்பாக பொத்துவில் பிரதேசத்திலுள்ள அருகம்பை பிரதேசமானது ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகைதரும் இடமாக இருக்கிறது.ஆனால் அது இதுவரையில் சுற்றுலா வலயமாக பதிவு செய்யப்படவில்லை.

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுங்கள்: ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை | Promotion Of Tourism In Eastern Province Hizbullah

அங்கிருக்கின்ற கடற்கரையை சுத்தம் செய்வதற்கான இயந்திரத்தை கூட சுற்றுலா அமைச்சு அல்லது சுற்றுலா பணிமனை அங்கிருக்கின்ற உள்ளூராட்சி மன்றத்திற்கு வழங்கவில்லை.

அது மட்டுமல்லாது சில காரணங்களால் மூன்று மாடிக்கு மேல் விடுதிகள் அமைப்பதற்கு அனுமதி இல்லாமலும் உள்ளது. இது போன்ற சிறிய விடயங்களால் அருகம்பை பிரதேசத்தில் சுற்றுலாத்துறை முன்னேற்றுவதற்கு நிறைய சவால்களை எதிர்நோக்கவேண்டிய நிலை காணப்படுகிறது.

சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: நலிந்த ஜயதிஸ்ஸ

சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: நலிந்த ஜயதிஸ்ஸ

நாட்டினுடைய வருமானம்

சம்மந்தப்பட்ட அமைச்சர் இந்த விடயத்தை உடனடியாக கருத்திற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அதேபோல், மட்டக்களப்பு விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக பதிவு செய்யப்பட்டிருப்பதுடன் கடந்தகாலங்களில் பல அபிவிருத்தித் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுங்கள்: ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை | Promotion Of Tourism In Eastern Province Hizbullah

இருந்தபோதிலும் பயணிகள் முனையம் வசதிகள் போதாமையால் விமானம் நிறுத்துவதற்கும் பயணிகளின் தேவைகளை நிறைவு செய்ய முடியாத நிலையும் காணப்படுகிறது.

இதனை சரி செய்ய முடியுமாக இருந்தால் சுற்றுலாப்பயணிகளை திருகோணமலை, பாசிக்குடா, பொலநறுவை, அருகம்மை பிரதேசங்களுக்கு நேரடியாக அழைத்து வரலாம் என்பதுடன் சுற்றுலாத்துறையினை கிழக்கு மாகாணத்தில் முன்னேற்றுவதோடு நாட்டினுடைய வருமானத்தையும் அதிகரிக்கலாம் என்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

அரிசி இறக்குமதியில் பாரிய மோசடி: முன்னாள் அமைச்சர் பகிரங்கம்

அரிசி இறக்குமதியில் பாரிய மோசடி: முன்னாள் அமைச்சர் பகிரங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW