பொறியியல் துறையில் சிரேஷ்ட பேராசிரியராகப் பதவி உயர்வு
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் பேராசிரியர் ஏ.எம். முஸாதிக், சிரேஷ்ட பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
2024 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்தப் பதவி உயர்வின் மூலம், அவர் இலங்கையில் பொறியியல் துறையில் சிரேஷ்ட பேராசிரியர் பதவியை அடைந்த முதலாவது முஸ்லிம் கல்வியியலாளர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
எந்திரவியல் பொறியியல் துறையில் சிறப்பாகப் பணியாற்றும் பேராசிரியர் முஸாதிக், பல்வேறு உள்ளூர் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களில் கற்பித்தல், ஆராய்ச்சி, நிர்வாகப் பொறுப்புகள் உள்ளிட்ட துறைகளில் தனது பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
அவர் வெளியிட்ட பல்தரப்பட்ட சர்வதேச ஆராய்ச்சி கட்டுரைகள், சமூக மேம்பாட்டுக்கான பங்களிப்புகள் மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கிய வழிகாட்டுதல்கள் இவரது கல்விசார் பயணத்தைச் சிறப்பாக மாற்றியுள்ளதாகப் பாராட்டுத் தெரிவிக்கப்படுகிண்றது.