டெங்கு அபாய வலயங்கள் பிரகடனம்
Sri Lanka
Sri Lankan Peoples
Dengue Prevalence in Sri Lanka
By Fathima
நாட்டின் 15 மாவட்டங்களுக்குட்பட்ட 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.
மேலும், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருணாகலை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களும் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Joint Now |