நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்
இலங்கையில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரம் கிட்டத்தட்ட 400 மருத்துவ நிபுணர்கள் வெளியேறியுள்ளதால் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கு தெரிவுகள் இன்மையால், சுகாதார அமைச்சகம் இறுக்கமான இடத்தில் உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை வைத்தியர்கள்
இதற்கிடையில் கிட்டத்தட்ட 5,000 இலங்கை வைத்தியர்கள், வெளிநாடுகளில் பயிற்சி பெறுவதற்கான தகுதிபெறும் பரீட்சைகளில் சித்தியடைந்துள்ள தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
எனவே, இது இன்னும் நிலைமையை மோசமாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஐக்கிய இராச்சியத்தில் பயிற்சிக்கான பரீட்சையில் தோற்றிய 3500 வெளிநாட்டு மருத்துவர்களில் 750 பேர் இலங்கையர்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |