காலாவதியான மருந்து பொருட்களுடன் சிக்கிய தனியார் வைத்தியசாலைகள்

Sri Lanka
By Harrish Jul 25, 2024 02:44 PM GMT
Harrish

Harrish

Courtesy: H A Roshan

திருகோணமலை(Trincomalee) - கிண்ணியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் காலாவதியான மருந்து பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறு தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவலைப்பானது கடந்த 12ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு

திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(24) வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தலா பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மீண்டும் இந்த குற்றத்தை செய்தால் 10 வருட தண்டனை வழங்கப்படும் என நீதிமன்ற நீதவான் மன்றில் தெரிவித்துள்ளார்.

காலாவதியான மருந்து பொருட்களுடன் சிக்கிய தனியார் வைத்தியசாலைகள் | Private Hospitals Holding Expired Medicines Sale

மேலும், குறித்த சுற்றி வலைப்பானது கிண்ணியா பழைய இலங்கை வங்கி வீதி, கிண்ணியா நகர சபை வீதி மற்றும் கிண்ணியா அல்அக்சா வீதி உள்ளிட்ட வீதிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW