பொசன் போயா தினத்தினை முன்னிட்டு வவுனியா சிறைக்கைதிகள் விடுவிப்பு
பொசன் போயா தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த 5 சிறைக்கைதிகள் பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியாக சிறை கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் இன்று (3.6.2023) விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.
இதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சிறு குற்றங்களை புரிந்த மற்றும் தண்டப்பணத்தினை செலுத்த முடியாத 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விசேட சந்தர்ப்பம்
இதன்போது சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிறைக் கைதிகளை சந்திப்பதற்கு அவர்களது உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.