மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்

Sri Lanka Eastern Province
By Rukshy Jun 29, 2024 09:28 AM GMT

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் புதிய அதிபராக எம்.எஸ்.எம்.பைசால் (SLPS) நேற்று (28) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 13ஆம் திகதி கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையின் பெறுபேற்றின் படி எம்.எஸ்.எம்.பைசால் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பலர் பங்கேற்பு

இதற்கான நியமன கடிதத்தினை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ் சஹுதுல் நஜீம் (SLEAS) வலயக்கல்வி பணிமனையில் வைத்து கையளித்திருந்தார்.

principal-maruthamuna-shams-college

பாடசாலையின் பிரதி அதிபர் எம்.பி.ஏ றாஜி, பழைய மாணவர் சங்க பிரதி தலைவர் எம்.எஸ். உமர் அலி ஆகியோர் மாலையிட்டு புதிய அதிபரினை வரவேற்றனர். 

principal-maruthamuna-shams-college

இவ்வைபவத்தில் புதிய அதிபரின் குடும்பத்தினர், ஷம்ஸ் மத்திய கல்லூரியின் ஆசிரிய குழாம், ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவ சங்க செயலாளர் சுஹைல் ஜமால்தீன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் பி.எம். அறபாத், ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவ சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஷம்ஸ் மத்திய கல்லூரி நலன் விரும்பிகள், அல் பஹ்ரியா பாடசாலையின் புதிய அதிபர் எம். அப்துல் சலாம், அல் பஹ்ரியா பாடசாலையின் நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW