பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கபட்டுள்ளது.
டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு இன்று(17) மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
தீர்ப்பு
பங்களாதேஷில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில் இந்த போராட்டம் வன்முறையாக மாறி இதில் பலர் கொல்லப்பட்டனர்.

ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்து பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டதுடன் பிரதமர் இல்லமும் குறிவைத்து தாக்கப்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்ட அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளதுடன் அவர் தற்போது இந்தியாவில் இருந்து வருகிறார்.
வங்காளதேசத்தில் பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
இடைக்கால அரசு ஷேக் ஹசீனா மீது மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் செய்ததாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த குற்றசாட்டினை ஷேக் ஹசீனா மறுத்து வந்தார்.
இந்நிலையில், ஷேக் ஹசீனா மீதான வழக்கில் இன்று டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.