அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நடவடிக்கை
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த அத்தியாவசியப் பொருட்களின் குறைக்கப்பட்ட விலையை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இன்று (06) முதல் பெற்றுக்கொள்ள முடியுமென அந்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
400 கிராம் பால் மா பாக்கெட் ஒன்றின் விலை 40 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை 910.00ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பச்சைப்பயறு ஒரு கிலோகிராம் 33 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை 965.00ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ அரிசி மாவு 28 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை 950.00ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ இந்திய வெங்காயம் 20 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை 285ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் கொண்டைக்கடலை 11 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை 444. 00ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.444.00, ஒரு கிலோ கோதுமை மாவு 5 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை 185.00 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ வெள்ளை சர்க்கரை 5 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை 258.00 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை கச்சா அரிசி கிலோ 5 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை 199.00ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வெங்காயம் கிலோ 5 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை 185.00 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |