கோதுமை மாவின் விலை அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பு: இறக்குமதியாளர்கள்

Floods In Sri Lanka
By Fathima Aug 17, 2023 03:16 PM GMT
Fathima

Fathima

நாட்டில் எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு அல்லது கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் கடந்த ஜுலை 14ஆம் திகதி முதல் இந்தியாவில் இருந்து கோதுமை மா இறக்குமதியை இடைநிறுத்தி உள்ளதாக இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கோதுமை மா  இறக்குமதி

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பு: இறக்குமதியாளர்கள் | Price Of Wheat Flour Will Increase

இந்தியாவில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரிய போதிலும், அதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பால் மா இறக்குமதிக்கு அனுமதிப்பத்திரம் தேவை எனவும் இதன் காரணமாக கோதுமை மாவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் கடந்த ஜுலை 14ஆம் திகதி முதல் இந்தியாவில் இருந்து கோதுமை மா இறக்குமதியை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலைமையினால் எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு அல்லது கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.