கோதுமை மாவின் விலை அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவை இறக்குமதி செய்வதாயின் கட்டாயமாக அனுமதிப்பத்திரம் பெற வேண்டும் என நிதியமைச்சு வர்த்தமானி அறிவித்ததையடுத்து சந்தையில் இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை 160.00 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதோடு, ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 200.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, ஒரு கிலோ கோதுமை விதைக்கு இறக்குமதி வரியாக 30 ருபாவாக இருந்தாலும் கோதுமை மா இறக்குமதியின் போது ஒரு கிலோவுக்கு 40 ருபா வரி அறவிடப்படுவதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.