இலங்கையில் இஞ்சியின் விலை அதிகரிப்பு
Ginger
Sri Lanka
Economy of Sri Lanka
By Laksi
இலங்கையில் இஞ்சியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, சந்தையில் இஞ்சியின் விலை ரூ.3,200 ஆக உயர்ந்துள்ளதால் கேள்வி குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் விதை இஞ்சியை விற்பனை செய்வதன் மூலம் விரைவான இலாபம் ஈட்டுவதாகவும் வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இஞ்சிக்கு தட்டுப்பாடு
அத்தோடு, மருத்துவ குணம் கொண்ட இஞ்சி அல்லது உள்ளூர் இஞ்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அண்மைக்காலமாக பெய்த கனமழையினால் பயிர்கள் நாசமடைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |