உணவுப்பொதிகளின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
தற்போதைய அரிசி விலைக்கு அமைய எதிர்காலத்தில் உணவுப்பொதிகளின் விலை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அநுராதபுர மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க அருண குமார தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தற்போதைய அரிசி நெருக்கடி காரணமாக அப்பகுதியிலுள்ள உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரிசி விநியோகம்
இதேவேளை, அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 5,200 மெற்றிக் தொன் அரிசியின் இரண்டாவது தொகுதியான 580 மெற்றிக் தொன் அரிசி நேற்று நாட்டை வந்தடைந்தது.
இதன்படி, அரிசி விநியோகம் இன்றுடன் நிறைவடைய உள்ளதாக அரச வர்த்தக இதர சட்ட நிறுவனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |