கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Fathima Jun 19, 2023 11:44 AM GMT
Fathima

Fathima

கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,450 முதல் 1,500 ரூபாய் வரையிலான விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்வதாக நுகர்வோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கோழி இறைச்சி உள்ளிட்ட பல உணவு வகைகளின் விலை உயர்வால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு | Price Of Chicken Meat Has Increased

634 பொருட்களின் விலை

அண்மைக்காலமாக உலக சந்தையில் காணப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பு, விநியோகம் தொடர்பான நெருக்கடி, இலங்கைக்குள் டொலரின் விலை அதிகரிப்பு என்பன காரணமாக பல பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகிக்னறன.

மேலும், அண்மையில் இறக்குமதி செய்யப்படும் 634 பொருட்களின் விலை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் அரிசி, உருளைக்கிழங்கு, பருப்பு, வெங்காயம், பாம் எண்ணெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி, பால், புத்தகங்கள், பேனாக்கள், காலணிகள், ரேப்பர்கள், டயர்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.