உணவு விலை அதிகரிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lanka Food Crisis
By Dhayani
உணவு ஆர்டர்களுக்கான விலைகளை அதிகரிக்க அகில இலங்கை விழா மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குவோர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு சந்தையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்கால ஆர்டர்களுக்கான விலையை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சாலிய ரவீந்திர தெரிவித்துள்ளார்.
மேலும் பெறப்படும் ஆர்டர்கள் 5% அதிகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.