புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் குறித்து மொட்டு கட்சி விமர்சனம்
புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் பயங்கரவாதம் என்றால் என்ன என்பது தொடர்பில் விளக்கம் அளிக்கவில்லை என மொட்டு கட்சி தெரிவித்துள்ளது.
மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சர் சரத் வீரசேக்கர இதனை தெரிவித்துள்ளார்.
தெளிவற்ற நிலை
தொடர்ந்துரையாற்றி அவர், பயங்கரவாதம் என்றால் என்ன. அதன் செயற்பாடுகள் எவ்வாறானது என்பது தெளிவற்ற நிலையில் காணப்படுகிறது. பயங்கரவாதம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டும்.அவ்வாறில்லாவிட்டால் பொது மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுகிறது.

உதாரணத்திற்கு அரசியல் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டால், அது மக்களை அச்சுறுத்தும் செயற்பாடு என நிறுத்த முடியும்.ஏனென்றால் புதிய சட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளும் தவறு என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடு என்ற போர்வையில் கட்டுப்படுத்த கூடும். அதனால் தான் பயங்கரவாதம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டும்.
இதை பயன்படுத்தி அரசுக்கு எதிரான எழுத்தாக்கம் மற்றும் ஊடக பிரசாரங்களையும கட்டுப்படுத்த கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.