பாரிய நீர் தட்டுப்பாடு ஏற்படும்: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
தற்போதைய காலநிலை மாற்றத்தினால் நாட்டில் இன்னும் 20 வருடங்களில் பாரிய நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
நுகேகொட அனுலா வித்தியாலயத்தின் இன்று(16.08.2023) இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், காலநிலையால் உருவாகவுள்ள குறித்த சவாலுக்கு இந்த தருணத்தில் இருந்தே அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தோ-பசுபிக் கட்டளை
இந்நிலையில், இலங்கையில் நிலவும் வறட்சி உணவுப் பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
இந்த பொதுவான சவாலை எதிர்கொள்வதற்கான யோசனைகளை பகிர்ந்துகொள்வதற்கும் ஆக்கப்பூர்வமான வழிகளைக் கண்டறிவதற்கும் அனைவரும் ஒன்றிணைவது கட்டாயமாகும் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கை கடற்படை, அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படை, அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் ஜூலி என்ட் ரிக்லி குளோபல் ஃபியூச்சர்ஸ் ஆய்வகம், யுஎஸ் இந்தோ-பசுபிக் கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து இந்தோ-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றத்தை நடத்துகிறது.
இதில் பங்கேற்று உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |