ஜனாதிபதித் தேர்தலில் சந்திரி்க்காவின் ஆதரவு யாருக்கு..! வெளியான தகவல்

SLFP Chandrika Kumaratunga Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 12, 2024 04:12 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் தான் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளார்.

அத்தோடு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தனகல்ல தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை கண்காணிப்பதற்கு வெளிநாட்டு கண்காணிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி

தேர்தலை கண்காணிப்பதற்கு வெளிநாட்டு கண்காணிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி

ஜனாதிபதி தேர்தல்

இந்தநிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களை அழைத்து சந்திரிகா தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் சந்திரி்க்காவின் ஆதரவு யாருக்கு..! வெளியான தகவல் | Presidential Electionno Support For Chandrika

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஆதரவு இல்லை

இதனையடுத்து கருத்து தெரிவித்த சந்திரிகா, தான் எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் சந்திரி்க்காவின் ஆதரவு யாருக்கு..! வெளியான தகவல் | Presidential Electionno Support For Chandrika

மேலும், தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பழைய உறுப்பினர் என்றும் சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

காலநிலை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

காலநிலை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW