நற்பிட்டிமுனையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக தேர்தல் குழுக்களின் கூட்டம் நற்பிட்டிமுனை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டமானது இன்று (5) முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, நற்பிட்டிமுனை பிரதேசத்தில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து 03 கூட்டங்களை நடத்துதல் தொடர்பிலும், தேர்தல் காரியாலயங்களை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்தல் சம்பந்தமாகவும், 5 கிராம் சேவகர் பிரிவுகளில் வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் பற்றியும் எதிர்வரும் (14.09.2024) கல்முனையில் சஜித்தை ஆதரித்து நடைபெற உள்ள கூட்டத்துக்கு அதிகமான மக்களை வரவழைப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
சஜித்தின் வெற்றி
இந்நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, உச்ச பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட செயற்குழு வின் செயலாளருமான A.C.சமால்தீன், உச்ச பீட உறுப்பினரும், நற்பிட்டிமுனை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளருமான யூ.எல்.தௌபிக், நற்பிட்டிமுனை மத்திய குழு செயலாளர் ஏ.எஸ்.எம்.ஜஹ்பர், நற்பிட்டிமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள 05 கிராம சேவகர் பிரிவுகளுக்கான கட்சி கிளைகள் தலைவர்கள், செயலாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான செயற்பாடுகளை கல்முனை தொகுதியில் முன்னெடுப்பதற்காக சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |