ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் பதிவு

Election Commission of Sri Lanka Election
By Mayuri Aug 09, 2024 08:43 AM GMT

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 20 சட்டமீறல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சட்டத்தை மீறியமை தொடர்பிலேயே குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ நிலையத்திற்கு இது போன்ற 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதுவரையில் கிடைத்துள்ள மொத்த முறைப்பாடுகள்

சட்டமீறல்கள் தொடர்பான எஞ்சிய முறைப்பாடுகள் 9 மாவட்ட தேர்தல் அத்தியச்சகர் அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் பதிவு | Presidential Election 157 Complaints Registered

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி தொடக்கம் இதுவரையிலான காலப்பகுதியில் 157 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW