கட்சி தீர்மானித்தால் ஜனாதிபதி வேட்பாளராக தயார்: தம்மிக்க பெரேரா
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக தன்னை முன்னிறுத்துவதற்கு கட்சி தீர்மானித்தால் அதற்குத் தயார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா(Dhammika Perera) தெரிவித்துள்ளார்.
கொழும்பில்(Colombo) இன்று(05.07.2024) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பயிற்சியாளர்கள் நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
பொருளாதார மேம்பாடு
தற்போது நாட்டில் 44 வீதமானவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கவில்லை எனவும், மேடைகளில் எவ்வளவு பெரிதாக பேசினாலும் பொருளாதாரத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்று எவரும் கூறுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் மேடைக்கு வந்தால் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை வெளிபடுத்துவேன் என்றும் தெரிவித்த தம்மிக்க பெரேரா, ஜனாதிபதி தேர்தலுக்காக சில அரசியல் கட்சிகள் இரண்டு வருடங்களாக பிரசாரம் செய்து வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எவரேனும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் எதிர்வரும் 90 நாட்களில் பொருளாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்புவது என்று கூற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |