ஜனாதிபதி ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம்
European Union
London
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
France
By Fathima
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்கான தனது விஜயத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.
இன்று (17.06.2023) அதிகாலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றுள்ளதை விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
தனது விஜயத்தின் போது ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளார்.

தலைவர்கள் மாநாடு
அத்துடன் பிரான்சில் நடைபெறும் நிதி வழங்கும் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டிலும் ஜனாதிபதி சிறப்புரையொன்றை ஆற்றவுள்ளார்.
எதிர்வரும் 26ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.