சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள ஜனாதிபதி

Ranil Wickremesinghe President of Sri lanka
By Mayuri Aug 01, 2024 04:42 AM GMT
Mayuri

Mayuri

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடல் இன்று (01.08.2024) காலை இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். நான்காவது தவணையை பெறுவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை

எந்த தாமதமும் இன்றி, தேர்தல் காலத்திலும் அந்த வேலைத்திட்டத்தில் எவ்வித விலகலும் இன்றி நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைத் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள ஜனாதிபதி | President To Meet Imf Representatives Today

ஏனெனில் மூன்றாவது பரிசீலனையில் கிடைக்கவுள்ள 4வது தவணை எந்த வகையிலும் தாமதமானால் அது இலங்கையின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அந்த விளைவை தவிர்க்க ஜனாதிபதி விசேட வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளார். வரவிருக்கும் காலத்தில், கடன் உரிமையாளர்களின் இந்த திட்டத்தை எவ்வாறு பாதுகாப்பது குறித்து கலந்துரையாட எதிர்பார்க்கின்றோம் என கூறியுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW