வடக்கிலுள்ள வளங்களை பயன்படுத்தி பொருளாதாரத்தினை எவ்வாறு மேம்படுத்தலாம்: ஆராயும் ரணில்
வடக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை பயன்படுத்தி பொருளாதாரத்தினை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட பிரதிநிதிகளுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று (07.01.2024) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“தற்பொழுது நம் அனைவருக்கும் உள்ள மிகப்பெரிய சவால் பொருளாதார மேம்பாட்டினை ஏற்படுத்துவதாகும்.
வடபகுதியில் உள்ள வளங்கள்
அத்தோடு, வடபகுதியில் உள்ள வளங்களை பயன்படுத்தி பொருளாதாரத்தினை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.
குறிப்பாக நான் வடக்கிற்கு வருகை தரும் போதெல்லாம் பிரச்சினை என்னவென கேட்கும் போது காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை அரசியல் தீர்வு என ஒரு சில பிரச்சினைகளுடன் மாத்திரம் என்னிடம் அணுகுவார்கள்.
அதனை விடுத்து நாம் முன்னோக்கி செல்வதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி தான் நான் ஆராய்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.










