ஜனாதிபதி அரசாங்க உறுப்பினர்களுக்கு விடுத்துள்ள உத்தரவு

Ranil Wickremesinghe President of Sri lanka Election
By Mayuri Apr 10, 2024 08:07 AM GMT

வெளிநாட்டுப் பயணங்களை முடிந்தவரை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அரசாங்க உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கு பிரசன்னம் தேவைப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தேர்தலுக்கான அரசியல் வேலைகள்

ஜனாதிபதி தேர்தலை நேரடி இலக்காகக் கொண்டு அரசியல் வேலைகளைத் தொடங்குவதற்கான ஊஞ்சல் பலகையாக இந்த ஆண்டு மே தின பேரணியை மிகப் பெரிய அளவில் நடத்த ஐக்கிய தேசியக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

தற்போது, நாடு முழுவதும் தொழில்முறை குழுக்களுடன் கூட்டங்களை நடத்தும் பணியில் அந்தக்கட்சி ஈடுபட்டுள்ளது. இந்த நிலையலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.