ஜனாதிபதி நாடு திரும்பினார்
சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.
நேற்றிரவு (27.05.2023) 11 மணியளவில் மலேசியா விமான சேவை விமானம் ஒன்றில் ஜனாதிபதி நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜப்பானில் நடைபெற்ற ஆசியாவின் எதிர்காலம் மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர் அங்கிருந்து மலேசியா வழியாக ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை
ஜனாதிபதி இதற்கு முன்னர் பல வெளிநாட்டுப் பயணங்களில் ஈடுபட்டுள்ள போதிலும் ஸ்ரீலங்கன் விமான சேவையை பயன்படுத்தியதில்லை.
மேலும், ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்திற்கு இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் விமான சேவையை பயன்படுத்தாமை தொடர்பில் விமான சேவை துறையில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

அமைச்சரவை மாற்றம்
ஜனாதிபதி நாடு திரும்பியுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் புதிய ஆளுனர்கள் சிலரது நியமனம் மற்றும் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.