நாட்டுக்கு பொருத்தமான ஜனாதிபதி ரணிலே..!

Ampara Eastern Province Sri Lanka Presidential Election 2024
By Farook Sihan Aug 20, 2024 07:40 AM GMT
Farook Sihan

Farook Sihan

நாட்டை இரண்டே வருடங்களில் மீட்ட ஜனாதிபதி ரணிலை பலப்படுத்தி தலை சிறந்த நாடாக முன்னேற்றவே எமது கட்சி ஜனாதிபதி ரணிலை ஆதரிக்க தீர்மானித்தது என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் அன்வர் எம். முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தலைமையகத்தில் நேற்று (19) மாலை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அஞ்சல் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ள அரச சேவையாளர்கள்

அஞ்சல் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ள அரச சேவையாளர்கள்

சர்வதேச அரசியலின் அனுபவம்

மேலும் தெரிவிக்கையில், ”பொருளாதார பின்னடைவை கடந்த காலங்களில் சந்தித்து வங்குரோத்து நிலைக்கு சென்று கொண்டிருந்த போது தற்போது நாட்டை ஆட்சி செய்ய கேட்கும் சஜித் பிரேமதாச , அனுரகுமார போன்றோர்கள் காணாமல் போய் இருந்தார்கள்.

நாட்டுக்கு பொருத்தமான ஜனாதிபதி ரணிலே..! | President Ranil Is Suitable For The Country

ஆனால் தேசிய பட்டியல் எம்.பியாக நாடாளுமன்றம் வந்த ரணில் விக்ரமசிங்க தைரியமாக முன்வந்து நாட்டை பொறுப்பேற்றார்.

மேலும் இரண்டு ஆண்டுகளில் இலங்கையை பொருளாதார சீர்கேட்டில் இருந்து மீட்டும் காட்டினார். எனவே தான் நாட்டை இரண்டே வருடங்களில் மீட்ட ஜனாதிபதி ரணிலை பலப்படுத்தி தலை சிறந்த நாடாக முன்னேற்றவே எமது கட்சி ஜனாதிபதி ரணிலை ஆதரிக்க தீர்மானித்தது.

கோவிட்டால் பாதிக்கப்பட்டு வீழ்ந்த நாடுகளில் விரைவாக எழுந்த நாடாக இலங்கை மிளிர காரணம் ரணிலின் அரசியல் முதிர்ச்சியும் சர்வதேச அரசியலின் அனுபவமும், திறமையும் ஆகும்.

பெரும்பான்மை வாக்குகள்

மக்கள் செல்வாக்கு நிறைந்த 100க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களையும், இலங்கையின் அதிக அரசியல் கட்சிகளையும், அதிகூடிய இலங்கையர்களின் நன்மதிப்பையும் பெற்ற ஜனாதிபதி மக்களுக்கு பிரச்சினை என்றவுடன் எவ்வாறு முன்வந்து தீர்வை கண்டாரோ அதே போன்று மக்களும் ரணிலை ஜனாதிபதியாக மீண்டும் ஆட்சி பீடம் ஏற்ற தயாராகி விட்டார்கள்.

நாட்டுக்கு பொருத்தமான ஜனாதிபதி ரணிலே..! | President Ranil Is Suitable For The Country

உணர்ச்சிவசப்படுத்தும் பேச்சுக்களுக்கு மக்கள் அடிபணியாமல் நாட்டில் மீண்டும் அரகல ஒன்றை தவிர்க்கும் விதமாக பெரும்பான்மை வாக்குகளுடன் ஜனாதிபதி ரணிலை ஆதரிப்பார்கள்.

பெரும்பான்மை சிங்கள மக்களினது மட்டுமல்ல தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ, மலையக மக்களின் அதி கூடிய வாக்கும் ரணிலுக்கே உள்ளது என்பதை செப்டம்பர் 22இல் இந்த நாடு தெரிந்து கொள்ளும்“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இஷாக் ரஹ்மான்

ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இஷாக் ரஹ்மான்

குழந்தைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குழந்தைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW