ஈரான் அதிபர் விபத்தின் பின்னணியில் நாசவேலை...! ஈரான் அரசு அறிவிப்பு

Iran Israel-Hamas War Ebrahim Raisi Iran President
By Fathima Jun 01, 2024 10:23 AM GMT
Fathima

Fathima

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பலியான உலங்குவானுர்தி விபத்தின் பின்னணியில் நாசவேலை எதுவும் இல்லை என ஈரான் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஈரான் ஆயுத படைகளின் தலைமை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில்,

"உலங்குவானுர்தியின் சிதைவுகள் மற்றும் மீதமுள்ள பாகங்கள் மற்றும் சம்பவம் நடந்த இடத்தில் சிதைவுகள் சிதறிக் கிடந்த விதம் ஆகியவற்றின் சோதனை முடிவுகளை பார்க்கும்போது ஹெலிகொப்டரில் நாசவேலை குண்டு வெடிப்பு எதுவும் நிகழவில்லை என்பது உறுதியாகி உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் - இஸ்ரேல் மோதல் 

ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி, கடந்த மாதம் 19 ஆம் திகதி அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக அங்கு சென்றார்.

ஈரான் அதிபர் விபத்தின் பின்னணியில் நாசவேலை...! ஈரான் அரசு அறிவிப்பு | President Of Iran Ebrahim Raisi Death

பின்னர் அவர் அங்கிருந்து இராணுவ உலங்குவானுர்தில் ஈரானுக்கு புறப்பட்ட நிலையில், ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள ஜோல்பா நகருக்கு அருகே மலைப்பகுதியில் உலங்குவானுர்தி விழுந்து நொறுங்கியது.

இதில் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமீர் அப்துல்லாஹியன் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்ததால் இது உண்மையில் விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா என்கிற கேள்வி எழுந்தது.

விபத்தின் பின்னணியில் நாசவேலை

இந்த சூழலில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஈரான் ஆயுத படைகளின் தலைமை, உலங்குவானுர்தி விபத்தில் சிக்கியது உண்மை தான் என்றும், தாக்குதலுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கடந்த வாரம் தெரிவித்தது.

இந்த நிலையில் அதிபர் இப்ராஹிம் ரைசி பலியான உலங்குவானுர்தி விபத்தின் பின்னணியில் நாசவேலை எதுவும் இல்லை என ஈரான் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஹெலிகொப்டரில் குண்டு வெடித்து இருக்கலாம் என்று எழுந்த யூகங்களுக்கு ஈரான் அரசு இவ்வாறு பதிலளித்துள்ளது.