நாடாளுமன்றத்தைக் கலைக்க நேரிடலாம்! சன்ன ஜயசுமன வெளிப்படுத்தியுள்ள விடயம்
22ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்ற முடியாது போனால் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க நேரிடும் என முன்னாள் அமைச்சர் சன்னஜயசுமன தெரிவித்துள்ளார்.
நொச்சியாகம பிரதேசத்தில் வைத் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 22ஆம் திருத்தம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் அது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு வெளியிடப்படும்.
பெரும்பான்மையினால் நிறைவேற்ற முடியாது போனால்
உயர் நீதிமன்றத்தின் பரிசீலனையின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களாக குறைப்பதற்கு மக்கள் கருத்துக்கணிப்பு கோரப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் பரிந்துரை முன்வைத்தால் ஜனாதிபதி அதற்கு ஏதேனும் சூழ்ச்சிகளை மேற்கொள்வார்.
மறுபுறம் 22ஆம் திருத்தத்தை நாடாளுமன்றில் 3 இல் 2 பெரும்பான்மையினால் நிறைவேற்ற முடியாது போனால் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான சாத்தியம் உள்ளது.
தற்போதைய நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை தற்போது அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் விரும்பமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |