உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கோட்டாபயவுக்கு இறுதி வரை உதவிய தேரர் : பகிரங்க வாக்குமூலம்

Gotabaya Rajapaksa Sri Lankan protests Omalpe Sobitha Thero Sri Lanka Violence 2022
By Benat Mar 15, 2024 01:31 AM GMT
Benat

Benat

அரகலயவின் போது கோட்டாபய ராஜபக்ச தனது உயிரை பாதுகாத்துக் கொள்ள நாட்டை விட்டு வெளியேறும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் நாட்டை விட்டுச் வெளியேறுவதற்கு நான் முன்னிலையில் இருந்து செயற்பட்டேன் என்பதை அவரது பிரத்தியேக பணியாளர்கள் நன்கு அறிவார்கள் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். 

எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கோட்டாபயவின் தவறான தீர்மானம்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள புத்தகத்தில் அவரது சிங்கள பௌத்த இருப்பை இல்லாதொழிக்க நான் முன்னிலையில் இருந்து செயற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கோட்டாபயவுக்கு இறுதி வரை உதவிய தேரர் : பகிரங்க வாக்குமூலம் | President Gotabaya Rajapaksa Flees The Country

கோட்டாபய ராஜபக்சவின் தவறான தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகள் என்பனவற்றால் தான் அவரது சிங்கள பௌத்த உறுதிப்பாடு இல்லாமல் போனது.

2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பொறுப்புக்கூற வேண்டும்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியி;ல் இருந்து வெளியேற்ற தேசிய மற்றும் சர்வதேச மத்தியில் எவ்வித சதிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டிய கோட்டாபய ராஜபக்ச சிங்கள பௌத்தத்தை மீண்டும் தீவிரப்படுத்த முயற்சிக்கிறார். நாட்டு மக்கள் மிக தெளிவாக உள்ளார்கள். ஆகவே புத்தகம் எழுதுவது பயனற்றது.

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கோட்டாபயவுக்கு இறுதி வரை உதவிய தேரர் : பகிரங்க வாக்குமூலம் | President Gotabaya Rajapaksa Flees The Country

தன்னை தெரிவு செய்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாதற்கு கோட்டாபய ராஜபக்ச அந்த புத்தகத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். உண்மையில் பொருளாதார நெருக்கடிக்கு கோட்டபய ராஜபக்ச வாக்குமூலம் வழங்க வேண்டும்.

அரகலயவின் போது கோட்டாபய ராஜபக்ச தனது உயிரை பாதுகாத்துக் கொள்ள நாட்டை விட்டு வெளியேறும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் நாட்டை விட்டுச் வெளியேறுவதற்கு நான் முன்னிலையில் இருந்து செயற்பட்டேன் என்பதை அவரது பிரத்தியேக பணியாளர்கள் நன்கு அறிவார்கள்.

கோட்டாபய ராஜபக்சவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.அவரது முறையற்ற நிர்வாகத்துக்கே எதிர்ப்பு தெரிவித்தோம் என குறிப்பிட்டார்.