அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்த திட்டம்
அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை அமைச்சர்கள், ஆளும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் அண்மையில் அழைக்கப்பட்டு அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையானது தேர்தலுக்கான முன்னரான ஆயத்தமாக இருக்கக்கூடும் என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மறைப் பெறுமதியில் காணப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தை பூச்சிய நிலைக்கு கொண்டு வந்துள்ளதாகவும், எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் இந்த நிலைமை நேர்ப் பெறுமதியை எட்டும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.