கட்டுப்பணத்தைச் செலுத்திய ரொஷான் ரணசிங்க
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சுயேட்சை வேட்பாளராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், ரொஷான் ரணசிங்க சார்பாக அலோக ரணசிங்க இன்று (6) இராஜகிரிய தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், அவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார்.
ரொஷான் ரணசிங்க
இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பில் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் முறுகல் நிலை காரணமாக ரொஷான் ரணசிங்க விளையாட்டுத் துறை அமைச்சுப் பதவியில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த வருடம் பதவி விலக்கப்பட்டார்.
அதன் பின்னரான நாட்களில் அரசியல் மேடைகளில் ரணில் விக்ரமசிங்கவை, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க காட்டமாக விமர்சித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |