ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடல்: ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் பொது மக்களுடன் கலந்துரையாடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த கலந்துரையாடலானது மக்களின் கருத்துக்களை அறியும் வகையில் அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தகவலை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடல்கள்
இந்தநிலையில், இன்றையதினம் (10) வவுனியா, மன்னார், புத்தளம் பகுதிகளில் மக்களுடனான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |