ஹக்கீம் மற்றும் ஹலீமுக்கு எதிராக கண்டியின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீம் ஆகியோருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த சுவரொட்டிகளானது இன்று (24) அக்குரணை உள்ளிட்ட கண்டி மாவட்டத்தின் பல ஊர்களில் ஒட்டப்பட்டுள்ளன.
இதன்போது, “ஹக்கீம், ஹலீம் கண்டிக்கு வேண்டாம்” என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ளது.
சுவரொட்டி பிரச்சாரம்
நேற்றைய தினம் (23) அக்குரணையில் இடம்பெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வருகை தந்த மு.க தலைவர் ஹக்கீமுக்கு எதிராக அக்குரணை ஊர் மக்கள் கோஷமெழுப்பியதையடுத்து இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அத்தோடு, அக்குரணையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் வெள்ளத்திற்கு தீர்வு தருவதாக கூறி பல தேர்தல்களிலும் வாக்குறுதி வழங்கி விட்டு மக்களை ஏமாற்றுவதாக கூறியே நேற்றைய தினம் பொதுமக்கள் ஹக்கீமுக்கு எதிராக கோஷமிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |