எதிர்த்தரப்பில் இருக்கும் ரணில் எங்களுக்கு சிறிதளவும் பொருட்டல்ல: ரவூப் ஹக்கீம்

Trincomalee Ranil Wickremesinghe Rauf Hakeem Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 27, 2024 07:22 AM GMT
Laksi

Laksi

எங்களுக்கு எதிர்த்தரப்பில் இருக்கும் ரணில் விக்ரமசிங்க சிறிதளவும் பொருட்டல்ல. அவரைப் பற்றி பேசுவதிலும் பயனில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் திருகோணமலை மாவட்டத்துக்கு பாரிய அபிவிருத்தி யுகமொன்று உருவாகும். அதேபோன்று, எங்களின் செயற்பாடுகளுக்கு ரணில் பொருட்டல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேருவில பிரதேசத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

பிரதான அரச வருமான மூலங்களில் பாரிய நிலுவைத் தொகையா..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

பிரதான அரச வருமான மூலங்களில் பாரிய நிலுவைத் தொகையா..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

பாரிய அபிவிருத்தி

ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில், சஜித்தின் ஆட்சிக் காலத்தில் பாரிய அபிவிருத்தி யுகமொன்று இந்த நாட்டுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். முன்னெப்போதும் இல்லாதவாறு வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்கு கிடைக்கும் வகையிலான யுகமொன்று ஏற்படும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

எதிர்த்தரப்பில் இருக்கும் ரணில் எங்களுக்கு சிறிதளவும் பொருட்டல்ல: ரவூப் ஹக்கீம் | President Election Ranil Rauff Hakeem

திருகோணமலை மாவட்டம் உபாய முறை ரீதியில் மிகவும் இருப்பிடத்தில் அமைந்துள்ளமை தொடர்பில் முழு சர்வதேசமும் கவனம் செலுத்தியுள்ளது. அதனை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, நாட்டின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொண்டு மக்களின் முன்னேற்றத்துக்காக அதிகபட்ச பயனை இந்தப் பகுதியில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்காக திட்டங்களை நடைமுறைப்படுத் துவதற்கு இதற்கு முன்னர் முயற்சித்திருந்தாலும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினார்கள்.

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

ஜனாதிபதி தேர்தல்

ரணில் இந்த தேர்தலில் நான்காம் இடத்துக்கு சென்று விடுவாரா என்றும் கூற முடியாது. இருந்தபோதும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியிலிருந்த காலப்பகுதியில் இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு என்றவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

எதிர்த்தரப்பில் இருக்கும் ரணில் எங்களுக்கு சிறிதளவும் பொருட்டல்ல: ரவூப் ஹக்கீம் | President Election Ranil Rauff Hakeem

அந்தக் குழுவில் நானும் இருந்தேன். எனது நண்பர் சம்பிக்க ரணவக்க இருந்தார். சுமந்திரன் இருந்தார். அதிலொரு முக்கியஸ்தர் என்றால் சிவப்பு சகோதரர்களின் ஜனாதிபதி வேட்பாளர். அந்தக்குழுவில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டிருந்தாலும் தேவையான சட்டத்திட்டங்கள் இல்லாததால் எதுவும் செய்ய முடியாமல் போனது.

அதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியடைந்து அரசாங்கத்தை அமைத்ததன் பின்னர் இந்த ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினூடாக விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தார்கள். அதனூடாக எங்களின் பிரஜா உரிமையைக் கூட இரத்துச் செய்ய முயற்சித்தார்கள் என்றார்.

குறைவாக உள்ள கடவுச்சீட்டுப் புத்தகங்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

குறைவாக உள்ள கடவுச்சீட்டுப் புத்தகங்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW