தேர்தல்களை பிற்போடக்கூடாது: நாடாளுமன்ற தேர்தலையே முதலில் நடத்தவேண்டும் - பசில்
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒத்திவைப்பதை கடுமையாக எதிர்ப்பதாக முன்னாள் நிதியமைச்சர் பசில்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போது ஆட்சியி;ல் உள்ளது ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அரசாங்கம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அரசாங்கம் உண்மையில் பொதுஜனபெரமுனவின் கீழ் செயற்படுகின்றதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒருசில அமைச்சர்களே ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் அலுவலகத்திற்கு செல்கின்றனர் முன்னர் ஸ்ரீலங்க பொதுஜனபெரமுனவின் காணப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல தற்போது அமைச்சர் பதவியை வகிக்கவில்லை எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வேறு எந்த தேர்தலிற்கு முன்பாகவும் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என பசில்ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்தினால் அதுமக்களின் உண்மையான விருப்பத்தை வெளிப்படுத்தாது ஒரு வாக்கினால் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் அவரது கட்சியே அதிகாரத்தை கைப்பற்றும் என பசில்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.