நாட்டில் அவசர காலச் சட்டத்தை பிறப்பித்த ஜனாதிபதி!

By Fathima Nov 29, 2025 07:53 AM GMT

நாட்டில் தற்போது நிலவும் அசாதரண நிலைமை காரணமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார்.   

இதன்படி, அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள அவரசகால சேவைகள்,

மின்சாரம் வழங்கல் தொடர்பான சேவைகள்,

எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் மற்றும் கொண்டு செல்லல்,

வைத்தியசாலைகள், வைத்திய சேவைகள் வழங்கும் அனைத்து நிறுவனங்களும் பணியில்,

போக்குவரத்து மற்றும் பொருட்கள் கொண்டு செல்லல்,

நீர் வழங்கல் மற்றும் அது தொடர்பான அனைத்து சேவைகளும், அத்தியாவசிய சேவைகள் வழங்கல் மற்றும் அது தொடர்பான அனைத்தும்.