ஜனாதிபதிக்கும் இராணுவ உயரதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்றுள்ள முக்கிய சந்திப்பு

Sri Lanka Army Sri Lanka President of Sri lanka
By Shadhu Shanker Feb 25, 2025 12:30 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும்(Anura Kumara Dissanayake) இராணுவ உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்றையதினம்(25) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

பாதுகாப்பு நிலைமை

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கும் இராணுவ உயரதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்றுள்ள முக்கிய சந்திப்பு | President Anura Meets Top Military Officials Today

மேலும், இராணுவ உயர் அதிகாரிகளுடனான இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.


GalleryGalleryGallery