இந்தியாவிற்கான முதல் சுற்றுப்பயணம் : ஜனாதிபதி அநுர

Anura Kumara Dissanayaka Sri Lanka President of Sri lanka India Presidential Update
By Rakshana MA Dec 15, 2024 12:56 PM GMT
Rakshana MA

Rakshana MA

ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணமாக இன்று (15) நாட்டிலிருந்து இந்தியா புறப்பட்டுச் செல்கிறேன் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

குறித்த செய்தியினை உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் இன்று(15) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதிவிட்டுள்ளார்.

சுற்றுப்பயணம் தொடர்பில் விளக்கமளித்த அவர்,

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் இந்த சுற்றுப்பயணத்தில் 17 ஆம் திகதி வரையில் இந்தியாவில் தங்கியிருப்பேன்.

பதவிப் பிரமாணம் செய்யவுள்ள ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்

பதவிப் பிரமாணம் செய்யவுள்ள ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்

பயணத்தின் திட்டம்

இந்தச் சுற்றுப் பயணத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான இருதரப்பு சந்திப்பில் முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

இதில் இந்தியாவின் துணை ஜனாதிபதி ஸ்ரீ ஜக்தீப் தன்கர்(Shri Jagdeep Dhankhar), இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர்(Dr.S.Jayashankar), இந்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நந்தா (J.P. Nanda), இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல்(Shri Ajith Doval) உள்ளிட்ட இராஜதந்திரிகள் பலருடனும் கலந்துரையாடவுள்ளேன்.

இந்தியாவிற்கான முதல் சுற்றுப்பயணம் : ஜனாதிபதி அநுர | President Anura India Visit First Time

மேலும், இருநாடுகளுக்கும் இடையில் முதலீடு மற்றும் வணிகம் தொடர்புகளை பலப்படுத்தும் நோக்கில் புதுடில்லியில் நடைபெறவிருக்கும் வர்த்தகர்களுடனான சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளேன்.

இறுதியாக ஜனாதிபதி புத்தகாயாவிற்கான சுற்றுப்பயணம் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளேன்.

அத்துடன் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்வர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பல பகுதியில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் பல பகுதியில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

யாழில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை..!

யாழில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை..!

       நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW