பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lanka Sri Lankan Peoples Education
By Rakshana MA Nov 09, 2024 10:36 AM GMT
Rakshana MA

Rakshana MA

பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாத பிள்ளைகளுக்கு கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்று (08) மாலை இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த புதிய பாடசாலை தவணை ஜனவரி இறுதியில் ஆரம்பமாகும் சந்தர்ப்பத்தில் பாடசாலைக்கு செல்ல, ​​புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை சரியாக வாங்க முடியாத அனைத்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

லண்டனில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்..!

லண்டனில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்..!

விண்ணப்பத்தின் மூலம் மக்களின் கோரிக்கை 

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க தமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்ட ஆவணத்திலேயே முன்னெடுக்கப்படவுள்ளது.

அஸ்வெசும கிடைக்காதவர்கள் மீண்டும் மேன்முறையீடு செய்யலாம். எந்தவொரு அரசியல் தலையீடுகளும் இன்றி நியாயமான முறையில் பரிசீலிக்கப்படும். ஏற்கனவே இது குறித்து பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! | President Announces Aid For School Kids

நீங்கள் அஸ்வெசும கிடைக்கும் மட்டத்தில் இருக்கிறீர்களா? அப்படியானால் வீடு தருவோம். ஆனால் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

இதன் மூலம் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூட வசதியில்லாத குடும்பங்கள் இருப்பின் அத்தகைய தரப்பினருக்கு அரசியல் தலையீடுகள் இன்றி குறுகிய காலத்திற்கு சில கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

விண்ணப்பங்கள் பழிவாங்கல் அல்ல

இதன் போாது முன்னாள் ஜனாதிபதிகள் சில சலுகைகளைப் பெற வேண்டுமாயின் விண்ணப்பத்தை சமர்ப்பித்து அதற்கான நியாயமான காரணங்களை முன்வைக்குமாறும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். மேலும் வீடு இல்லையென்றாலும் அவர்கள் அரசாங்கத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! | President Announces Aid For School Kids

இந்நிலையில் நாட்டு குடிமக்கள் எதையாவது வாங்க விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகள் விண்ணப்பிக்காமல் அனைத்தையும் எடுத்துக்கொள்கிறார்கள். அதனால் தான் விண்ணப்பம் அனுப்ப கூறுகிறோம்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்ற வகையில் முதலில் சட்டம், அரசியலமைப்பு மற்றும் சுற்றறிக்கையால் வழங்கப்படாத அனைத்து சட்டவிரோத விடயங்களையும் திரும்பப்பெற்றோம். இதை வைத்து கொண்டு பழிவாங்குகிறோம் என்கின்றனர். இது பழிவாங்குவது அல்ல சட்டத்திற்கு உட்பட்டே செய்கிறோம். 

அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத மக்களுக்கு வெளியான அறிவித்தல்

அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத மக்களுக்கு வெளியான அறிவித்தல்

அரசியல் தரமேம்பாடு

அத்துடன் சட்டரீதியாக கொடுக்கப்பட்டுள்ளவற்றையும் திரும்பப் பெறுவதற்காக சட்டத்தை மாற்றுவதற்கான குழுவையும் தேசிய மக்கள் சக்தி அமைத்துள்ளதை நினைவில் கொள்ளுங்கள்.

பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! | President Announces Aid For School Kids

விண்ணப்பத்தை பரிசீலித்து கருணையுடன் கொடுப்பது தவறா? இது பழிவாங்கல் அல்ல என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மேலும், நமது நாட்டின் அரசியலை ஒரு தரத்திற்கு கொண்டு வருவோம்.

ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசு அரசியலை தரப்படுத்துகிறது மற்றும் நியாயமற்ற அனைத்தும் ஒழிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கான தாயின் பரிசு - பெண்கள் அறிய வேண்டியவை

திருமணத்திற்கான தாயின் பரிசு - பெண்கள் அறிய வேண்டியவை

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW