அமெரிக்காவில் சக்திவாய்ந்த சூறாவளி: நான்கு பேர் உயிரிழப்பு

United States of America Texas
By Fathima Jun 23, 2023 10:16 AM GMT
Fathima

Fathima

தெற்கு அமெரிக்க மாநிலமான டெக்சஸ் மாநிலத்தில் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சூறாவளி நேற்றைய தினம் (22.06.2023) தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து அண்டை நகரமான லுபாக் தீயணைப்பு சேவை தனது டுவிட்டர் பக்கத்தில், " டெக்சஸ் மாநிலத்தில் முன்னொருபோதும் இல்லாத வகையில் சக்திவாய்ந்த சூறாவளி ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி நான்கு பேர் இறந்துள்ளனர் மற்றும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவில் சக்திவாய்ந்த சூறாவளி: நான்கு பேர் உயிரிழப்பு | Powerful Hurricane In America

நான்கு சூறாவளிகள் பதிவு

சூறாவளியால் கட்டடங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், டெக்சஸில் நேற்று முன்தினம் (21.06.2023) குறைந்தது நான்கு சூறாவளிகள் பதிவாகியுள்ளன.

மழை மற்றும் பலத்த காற்று மாநிலத்தின் சில நகரங்களையும் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.