நாளையதினம் மின்தடை ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக எச்சரிக்கை

Power cut Sri Lanka Sri Lanka Power Cut Today
By Fathima Jun 20, 2023 08:07 AM GMT
Fathima

Fathima

நாட்டில் மின்தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கொழும்பில் நேற்றைய தினம் (19.06.2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நாளைய தினம் (21.06.2023) மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மின் தடை ஏற்படக்கூடும்.

மறுசீரமைப்பு என்ற போர்வையில் இலங்கை மின்சார சபையை விற்பனை செய்யத் தயாராகும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அனைத்து ஊழியர்களையும் நாளைய தினம் கொழும்புக்கு அழைக்க தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

எனவே அன்றைய தினம் அனைத்து வேலைத்தளங்களினதும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.