வழமைக்குத் திரும்பிய மின் விநியோகம்

Power cut Sri Lanka Power Cut Today
By Benat 2 months ago
Benat

Benat

நாடளாவிய ரீதியில் பல இடங்களில் மின் விநியோகம் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது. 

கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட சில முக்கிய இடங்களுக்கான மின் விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.  

மேலும், கொழும்பு - 13 உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் மின்சார விநியோகம் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது. 

நாடளாவிய ரீதியில் இன்று காலை 11:15 மணி முதல் ஏற்பட்ட மின் தடை காரணமாக நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலை, அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையம், பியகம, சபுகஸ்கந்த உள்ளிட்ட பல முக்கியமான இடங்களில் மின் விநியோகம் மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வழமைக்குத் திரும்பிய மின் விநியோகம் | Power Cut Sri Lanka Today