பொத்துவில் கடலில் மூழ்கிய இருவர்..! பொலிஸார் செய்த செயல்
Sri Lankan Peoples
Eastern Province
By Rakshana MA
பொத்துவில் (Pottuvil) கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பொத்துவில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சம்பவமானது, நேற்று (18) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த சம்பவத்தின் போது அம்பாறை சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இரண்டு இளைஞர்களே காப்பாற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் மூழ்கிய இருவர்
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த இருவரும் பொத்துவில் கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.
இதன்போது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர், கடலில் மூழ்கிய இருவரையும் காப்பாற்றி அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |