கிழங்கு கடை சுவையூட்டிகள்! கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட இரவு நேர திடீர் சோதனை

Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Kalmunai Public Health Inspector
By Rakshana MA Feb 08, 2025 08:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

சுகாதாரமற்ற கிழங்கு பொரியல் உட்பட டேஸ்ட் கடைகள் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனையில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த திடீர் சோதனையானது, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஸஹீலா இஸ்ஸதீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே.மதன் தலைமையில் நேற்று(07) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதிகரித்துள்ள பச்சை மிளகாய் விலை!

அதிகரித்துள்ள பச்சை மிளகாய் விலை!

விடுக்கப்பட்ட எச்சரிக்கை 

கடந்த காலங்களில் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள் உட்பட டேஸ்ட் கிழங்கு பொரியல் கடைகளின் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும், உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தனர்.

கிழங்கு கடை சுவையூட்டிகள்! கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட இரவு நேர திடீர் சோதனை | Potato Shop Condiments Raid In Kalmunai

அதனை ஒட்டியதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய, சிரேஸ்ட மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.ஜெரின், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உட்பட காரியாலய உத்தியோகத்தர்களால், சாய்ந்தமருது பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும் கடைகள் மற்றும் கிழங்கு பொரியல் தயாரிக்கும் கடைகளில் திடீர் பரிசோதனையும் முற்றுகையும் இடம்பெற்றது.

இதில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகளும் வெயிலில் வைக்கப்பட்ட மற்றும் வடிகான்கள் மீது வைக்கப்பட்ட உணவுகள் கைப்பற்றப்பட்டது.

கிழங்கு கடை சுவையூட்டிகள்! கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட இரவு நேர திடீர் சோதனை | Potato Shop Condiments Raid In Kalmunai

இதன்போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, முறையான களஞ்சிய வசதி இல்லாத மற்றும் பழுதடைந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

அதே போன்று சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தேவையான மேலதிக ஒழுங்குகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேற்கொண்டுள்ளது.

இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம்

இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம்

காசா போர்நிறுத்தம்! முறிந்து போகும் ஆபத்தில்..

காசா போர்நிறுத்தம்! முறிந்து போகும் ஆபத்தில்..

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery