உணவு பொதியில் பூரான் : திருகோணமலையில் சம்பவம்
திருகோணமலை நகரில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் எடுக்கப்பட்ட உணவு பொதியில் பூரான் இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மதிய உணவுக்காக குறித்த சைவ உணவகத்தில் உணவுபொதி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் நடவடிக்கை
அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட உணவுபொதிக்குள் பூரான் இருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த உணவகத்தை மூடியதுடன் உணவக உரிமையாளர் மற்றும் உணவு தாயாரிப்பாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்ட நிலையில் எச்சரிக்கையின் பின் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.